மக்களவை வேட்பாளர் தேர்வின்போது, முதல்வர் ஸ்டாலின், என்னிடம் நீங்க என்ன ஜாதி எனக் கேட்டார். உடனே நான் வன்னியர் என்று சொன்னேன் என வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன், தற்போது வேலூர் தொகுதி எம்.பியாக உள்ளார். அவரே மீண்டும் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போதும் சரி, அல்லது கட்சி கூட்டங்களில் ஏதாவது சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை கதிர் ஆனந்த் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த அவர், மக்களவைத் தேர்தல் வேட்பாளர் நேர்முகத்தில் கலந்து கொண்டேன். அப்போது, முதல்வர் ஸ்டாலின், என்னிடம் நீங்க என்ன ஜாதி எனக் கேட்டார். உடனே நான் வன்னியர் என்று சொன்னேன் என வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் ஜாதி பார்த்து தேர்தலில் சீட் கொடுத்துள்ளார் என்று கதிர் ஆனந்த் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.