நாட்டில் ஊழலை வேரோடு அழிப்போம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது, பிரதமர் மோடி அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். முன்பு ஜாதி, வாரிசு, வாக்கு வங்கி என அரசியல் இருந்ததாகவும், ஆனால் அதற்கு மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாரிசு அரசியலை பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இண்டி கூட்டணி ஊழல்வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இண்டி கூட்டணி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டுமே காப்பாற்ற முயல்வதாகவும் அவர் தெரிவித்தார். ஊழலை வேரோடு அழிப்போம் என்று கூறிய நட்டா, பிரதமர் மோடி ஊழலை ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார்.