மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!
Jun 30, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜரான இயக்குநர் அமீரிடம் திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

இந்தியாவில் இருந்து போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மேற்கு டெல்லி கைலாஷ் பார்க்கில் உள்ள கிடங்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கும்பலின் தலைவனும், திமுக அயலக அணி முன்னாள்  நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி அவனை போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியும்,  திரைப்பட இயக்குநருமான அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து இயக்குநர் அமீர் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 11மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

ஜாபர் சாதிக்குடன் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தொடர்பு, இறைவன் மிகப்பெரியவன் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமீர் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் அமீர் சென்னை திரும்பியுள்ளார்.

Tags: delhiNCPenquiryDirector Ameer
ShareTweetSendShare
Previous Post

யானைகளின் வெப்பத்தை சமாளிக்க ஷவர் பாத்!

Next Post

மயிலாடுதுறையில் சிறுத்தை : மக்கள் பீதி!

Related News

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies