2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்காக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு நாட்டுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம், ஆற்று மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நடப்பாண்டில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பதிவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
I sincerely thank EAM @DrSJaishankar and the Government of #India for the renewal of the quota to enable #Maldives to import essential commodities from India during the years 2024 and 2025.
This is truly a gesture which signifies the longstanding friendship, and the strong…
— Moosa Zameer (@MoosaZameer) April 5, 2024
மாலத்தீவு தேசத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மாலத்தீவுகளுக்கு ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையிலேயே நீண்டகால நட்பைக் குறிக்கும் ஒரு சைகையாகும், மேலும் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில்,
இந்தியா “முதலில் அண்டை நாடுகளுக்கும் சாகர் கொள்கைகளுக்கும் உறுதியளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
You are welcome, FM @MoosaZameer.
India stands firmly committed to its Neighbourhood First and SAGAR policies. https://t.co/mKYOYu2aM9
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) April 6, 2024