பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்டி அடிக்க முடியாது. மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்கள் வருவார்கள். ஒருவராக இருந்தாலும், நூறு பேராக இருந்தாலும்.
விரட்டி அடிப்போம் என சொல்பவர்கள் தான், இன்றைக்கு பாசிச கட்சிகள். தி.மு.க.,வின் அரசியல் சொற்பொழிவுகளில், அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை யோசித்தால், இதேபோன்று அதிகமாக, கோரமாக, பயங்கரமான வார்த்தைகளை போட்டு மக்களை ஆக்ரோஷம் செய்ய முயற்சி செய்வார்கள்.
ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி. அதனால், தான் விரட்டி அடிப்போம் என்ற வார்த்தையை சொல்கிறார்கள். அவர்கள் மட்டும் ஓட்டுப்போடவில்லை. மக்கள் அனைவரும் ஓட்டு போடுகிறார்கள். முதல்வர் இன்னும் கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசினால் நல்லது எனத் தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது மாசடைந்த நீர் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக காலரா போன்ற நோய் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதல்வர் சித்தராமையா ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதில் நீர் மற்றும் பாசன பணிகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.