ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி- மும்பை அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ- ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.