குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Oct 18, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 03:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பது உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர்நீதிமன்றம் விமர்சித்த பின்பும் அதனை அரசு பின்பற்ற நினைப்பது சமூக நீதிக்கு எதிரான நடைமுறை எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆள்குத்தகை முறையை தமிழக அரசு திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் ஓய்வூதியம், பணிக்கொடை மட்டுமல்லாது எந்த வகையான இட ஒதுக்கீடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படாது. இது மிகப்பெரிய அநீதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை ஒற்றை ஆணியில் பறித்திருக்கும் திமுகவுக்கு சமூகநீதி குறித்தும், தொழிலாளர்கள் உரிமை குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

மேலும், சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை அரசு கைவிட வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Appointment of driver and conductor on lease - Anbumani Ramadoss condemned!
Share
Tweet
SendShare
Previous Post

உற்றுநோக்கப்படும் சபாநாயகர் தேர்வு புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு?

Next Post

சிலம்பம் சுற்றி குளங்களை தூர்வாரக் கோரி மனு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies