மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடியரசுத் தலைவரின் உரை உள்ளபோது, ராகுல் காந்தி மதம் சார்ந்து பிரிவினை குறித்து பேசுகிறார் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் முடிவு மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் திருப்பதி, உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மத்தை அழிப்பேன் என இந்து மதம் குறித்து பேசுகிறார் எனவும் அதை அறியாமல் ராகுல் காந்தி இந்து மதம் குறித்து பேசுவது அழகல்ல எனவும் கூறினார்.