சென்னை அடையாறு பணிமனை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகர குளிர்சாதன பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு மாநகர குளிர்சாதனப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அடையாறு அருகே சென்றபோது பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து அவர்கள் உடனடியாக கீழே இறங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.