பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 08:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பானி பூரி பிடிக்காதவர்கள் சாப்பிடாதவர்கள் இந்தியாவில் உண்டா என்ன? வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவாக இருந்தாலும் , இந்தியா முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிறியவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பானி பூரி ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

உருளைக் கிழங்கு, புளி, வெங்காயம், கொண்டை கடலை மற்றும் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் பானி பூரி உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கேள்வி எப்போதுமே எழுவதுண்டு. பானி பூரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது.

கர்நாடகாவில் தெருவோரங்களில் விற்கப்படும் பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளின் தரம் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 260 பானி பூரி மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் பல அதிர்ச்சியான முடிவுகள் வெளிவந்துள்ளன.

சோதனை செய்யப்பட்ட பானி பூரிகளில் 22 சதவீதம் உண்பதற்கான தரத்தை மீறியுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

260 பானி பூரிகளில் 41 மாதிரி பானி பூரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்று நோயை உருவாக்கும் வேதிப் பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் 18 மாதிரி பானி பூரிகள் மனிதர்கள் உண்பதற்குத் தகுதியற்றவை என்றும், அவற்றில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பானி பூரி வியாபாரிகள், தரமற்ற மற்றும் புற்று நோய் உருவாக்கும் செயற்கை நிறங்களைச் சேர்ப்பது கண்டறிய பட்டால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரித்து இருக்கிறார்.

பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் பாதுகாப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, ஷவர்மா மாதிரிகளில் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப் பட்ட 17 ஷவர்மா மாதிரிகளில் 8 மாதிரிகள் தரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, கர்நாடக அரசு கோபி மஞ்சூரியான், மற்றும் பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரோடமின் பி என்னும் வேதிப்பொருளுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Tags: If you eat pani puricancer is guaranteed? Shocking information!
Share
Tweet
SendShare
Previous Post

மாநகர குளிர்சாதன பேருந்தில் தீவிபத்து!

Next Post

ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies