ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் வேலைக்காக விண்ணப்பித்த பெரும்பாலான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு, அந்நாட்டு ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
உக்ரைனுக்கு எதிரான போரில் 2 இந்தியர்கள் உயிரிழக்க நேர்ந்தது. இந்த நிலையில், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி, ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்த வகையில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக டெல்லியில் ரஷ்ய தூதரக அதிகாரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.