கன்வர் யாத்திரை- இறைச்சி கடைகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
Nov 7, 2026, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்வர் யாத்திரை- இறைச்சி கடைகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தர பிரதேசத்தில். கன்வர் யாத்திரையையொட்டி, சாவன் மாதம் முழுவதும் பக்தர்கள் செல்லும் பாதையில் இறைச்சிக் கடைகளை மூட அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

கன்வர் யாத்திரையையொட்டி பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ஹரித்வாருக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள், கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுத்துவருவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு கன்வர் யாத்திரை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெறுவதால், பக்தர்கள் காவடியை தூக்கிச் செல்லும் வழித்தடத்தில் இறைச்சிக் கடைகளை மூட உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.

மேலும், உணவக உரிமையாளர்கள் தங்களது பெயர் பலகையை கடையின் முகப்பில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தியது.

இதேபோல உத்தரகண்ட், மத்திய பிரதேச அரசுகளும் அறிவித்தன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறைச்சிக் கடைகளை மூடும் உத்தர பிரதேச அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், கடைகளில் வியாபாரம் செய்யப்படும் பொருட்களின் விவரத்தை மட்டும் முகப்பில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Kanwar Yatra-Supreme Court interim stay on order to close meat shops!
Share
Tweet
SendShare
Previous Post

புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும்! – அண்ணாமலை

Next Post

தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

Related News

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies