பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம்! - அண்ணாமலை
Sep 12, 2026, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியக் குடிமக்கள் எங்கு பாதிப்புக்குள்ளானாலும் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுகவின் மேடைப்பேச்சாளர் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல; இந்திய மீனவர்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளாவதற்கு திமுகவும், காங்கிரஸும் கச்சத்தீவை தாரை வார்த்தது தான் காரணம் என கூறியுள்ளார்.

மீனவர்களை வஞ்சித்த திமுக, தற்போது மீனவர் நலன் என்று நாடகமாடுகிறது என்பது மீனவ சமுதாய மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்தியக் குடிமக்கள் எங்குப் பாதிப்புக்குள்ளானாலும் அவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழன், இந்தியன் என்று திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் போல, பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டாம் என்றும், அவர் வகிக்கும் மாநில முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Don't stage a separation drama! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் மாஸ்டர் மாதன் மறைவு!

Next Post

ராணுவ வீரர்களுக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது!- ஆர்.என் ரவி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies