வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!
Sep 12, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ தாண்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவாக மாறியுள்ளது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. குடியிருப்புகள் இருந்த தடமே இல்லாமல் காட்சியளிக்கின்றன. முண்டக்கை பகுதியில் அனைத்து இடங்களும் மண், மரங்கள் மற்றும் பாறைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 28 குழந்தைகள் உள்ளிட்ட 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, கோழிக்கோடு மாவட்டம் விளங்காடு பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட மாவட்ட ஆட்சியர் சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஆட்சியரை, மீட்பு படையினரின் கயிறு கட்டி மீட்டனர்.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கோழிக்கோட்டில் இருந்து வயநாட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்ற முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் வேணு, டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags: Wayanad Landslide!: The death toll exceeds 280!
Share
Tweet
SendShare
Previous Post

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

Next Post

வயநாடு நிலச்சரிவு! : ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies