நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோக்கால் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் புவியியல் துறை வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள வீடுகளில் வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விரிசல்கள் தொடர்ந்து ஏற்பட்டால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொள்வதற்கான அவசர எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.