கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன், புகைப் பிடிக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகரான தர்ஷன், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட்டுடன் மூன்று பேருடன் பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் 7 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.