நீலகிரி மாவட்டம், கூடலூரில் அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுததியவரை போலீசார் கைது செய்தனர்.
கரியசோலை கிராமத்தில் அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வெடுக்க சென்றனர்.
அப்போது மதுபோதையில் அங்கு சென்ற நிஷான் என்ற இளைஞர், பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். ஆனால் பேருந்து வழியில் விபத்துக்குள்ளாகி நின்றது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் நிஷானை கைது செய்தனர்.