தீய சக்திகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்குரு குழுமம் சார்பில், ராமர் கோயில் கட்டுமானப் பணியின்போது 16 மாதங்களாக நான்கு வேதங்களையும் ஓதிய குருமார்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மதமாற்றத்தை தீயசக்தியுடன் ஒப்பிட்டு உவமையுடன் கருத்து தெரிவித்தார்.
அந்த வகையில், அண்மையில் தாம் படித்த அமெரிக்க எழுத்தாளரின் புத்தகத்தின் வாயிலாக தீயசக்தி, அந்நாட்டில் நூற்றாண்டுக்கும் மேலாக வேரூன்றி கலாசார சீரழிவை ஏற்படுத்தியதாக மோகன் பகவத் கூறினார்.
பின்னர், போலந்து, அரபு தேசங்களில் தீய சக்தி பரவி, அண்மையில் வங்கேதசத்திலும் வேரூன்றியதாக அவர் குறிப்பிட்டார்.
தீயசக்திக்கு நாம் இறுதிச்சடங்கு செய்து விடுவதால், நம் நாட்டை வந்தடைந்ததும் தொடக்க நிலையிலேயே அவை வலுவிழந்து போய்விடுவதாக மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.