திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட “தி கோட்” திரைப்படத்தின் 20க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தமிழகம் முழுவதும் இன்று விஜய் நடிப்பில் உருவான “தி கோட்” திரைப்படம் வெளியானது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பேனர்கள் வைத்தும் கொண்டாடினர்.
இந்நிலையில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்.