தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வார இறுதி நாட்கள், முகூர்த்தம், மிலாடி நபி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இயல்பை விட 3 மடங்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.