விண்வெளி தனக்கு மகிழ்ச்சியான இடம் என்றும், அங்கு இருப்பதை மிகவும் விரும்புவதாகவும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விண்வெளியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியிலிருந்து வாக்களிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.