காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டங்கள் உதவாது என்றும், இருமாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், உரிய காலத்தில் மழை பெய்யும்போது எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கூறிய மத்திய அமைச்சர் குமாரசாமி, மழை குறைவாக இருக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுவதாக தெரிவித்தார்.