குப்பை வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஐ- போன் 16 போனை பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ- போன் 16 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனை வாங்க இளைஞர்கள் வரிசையில் காத்துக்கிடந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில் குப்பைகளை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர், தனது மகன் நன்றாக படிப்பதை பாராட்டும் வகையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை வாங்கி பரிசளித்துள்ளார். அந்த வியாபாரி தனது கையில் ஐ-போனை வைத்துக்கொண்டு நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.