இந்தி நடிகர் கோவிந்தா தனது துப்பாக்கியை துடைத்தபோது கைதவறி கீழே விழுந்ததில், அதன் குண்டுபாய்ந்து காயமடைந்தார்.
நடிகர் கோவிந்தா காலை 4.45 மணியளவில் மும்பையில் தனது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது கைதவறி கீழே விழுந்த துப்பாக்கியின் விசைப்பகுதி திடீரென இயங்கியதால் குண்டு வெளியேறி, கோவிந்தாவின் கால்மூட்டு பகுதியில் பாய்ந்தது.
இதனால் காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டதாகவும், தற்போது கோவிந்தாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகர் கோவிந்தா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவில் முக்கிய நிர்வாகியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.