உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் மாறாத மற்றொரு மனிதனை சந்திப்பானா? என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்விக்குறியாக இருந்தது.
ஆனால் அது தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு மனிதர்களை போன்ற அதிநுட்ப ரோபோக்களை சர்வதேச நாடுகள் உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில், பெய்ஜிங் நகரில், முற்றிலும் ஏஐ டாக்டர்கள் கொண்ட Agent Hospital அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 14 ஏஐ மருத்துவர்கள், 4 விர்ச்சுவல் நர்சுகள் பணிபுரிகின்றனர்.
இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருடங்கள் ஆகும் என கூறப்படும் நிலையில் தற்போது ஏஐ மருத்துவர்கள் மிக விரைவாக அதிநவீன சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மனித உயிர்களை ஏஐ காப்பாற்றும் என்று கூறப்பட்டாலும், இதில் ஆபத்துகளும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.