ரோந்து காவலர்களிடம் அடாவடி செய்த ஜோடி : தட்டி தூக்கிய தனிப்படை - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோந்து காவலர்களிடம் அடாவடி செய்த ஜோடி : தட்டி தூக்கிய தனிப்படை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில், இரவுப் பணியில் இருந்த ரோந்துக் காவலர்களிடம் அத்துமீறி தகாத முறையில் பேசிய ஜோடியை, தனிப்படை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நடந்த செயலுக்கு மன்னிப்புக் கோரிய அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் ரோந்துப் பணியில் இருந்த போது சாலையில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறியதற்காக ஒரு ஜோடி பேசியது சற்றே Jerk-ஐ ஏற்படுத்தியது…

உதயநிதியை எனக்குத் தெரியும்…வரச்சொல்லட்டுமா?

இதுமட்டுமின்றி, பணியில் இருந்த காவல்துறையினரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அந்த நபரும், அவருடன் இருந்த பெண்ணும் எல்லை மீறிப் பேசினர்…. இருவரும் போதையில் இருந்ததை அறிந்த போலீசார் அவர்களுடன் பெரிதாக வாக்குவாதம் செய்யாமல், அங்கு நடந்த சம்பவத்தை மொபைலில் பதிவு செய்தனர்….

பட்டினப்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் அந்த ஜோடி செய்த அலப்பறை தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறையினருக்கே டஃப் கொடுத்த அந்த ஜோடி பற்றி ரோந்துப் பணியில் இருந்த காவலர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்த ஜோடியை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேளச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் அவர்களை தனிப்படை போலீசார் தட்டித் தூக்கினர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சந்திர மோகன் என்பதும், வேளச்சேரியை சேர்ந்த அவர், கார் வாங்கி விற்கும் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவருடன் இணைந்து காவலர்களை கடுப்பேற்றிய பெண்ணின் பெயர் தனலட்சுமி என்பதும், அவர் மயிலாப்பூரில் வசிப்பதும் தெரியவந்தது. இருவரும் கணவன், மனைவி அல்ல என்றும், அவர்களுக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததையும் காவலர்கள் அறிந்தனர். இதைடுத்து, அங்கிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அந்த ஜோடியை அழைத்து வந்த போது நடந்த சம்பவங்கள் வேற லெவல்….

போதையில் இருந்த போது எந்த வித தயக்கமும் இன்றி தரக்குறைவாக பேசிய அந்த நபர், காவல் நிலையத்தில் செய்தியாளர்களின் கேமராவை கண்டதும் தலை தெறிக்க ஓடினார்…

கடைசியாக இந்த சம்பவத்தில் நடந்த ட்விஸ்ட் என்னவென்றால்…. போதையில் இருந்த காரணத்தால் காவல்துறையினரைப் பற்றி தரக்குறைவாக பேசினேன்… மன்னித்து விடுங்கள் என அவர் வருத்தம் தெரிவித்த வீடியோவை சென்னை காவல்துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டது….

மெரினா கடற்கரை அருகே நள்ளிரவில் காவலர்களுடன் அடாவடி செய்த ஜோடியை, ஒரே நாளில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி இருக்கிறது….

Tags: Pattinpakkamcar issueChennaiMylapore PoliceMarina Beach Loop Road
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக வெற்றி கழகத்தை கண்டு சீமான் பயப்படுகிறார் – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் விமர்சனம்!

Next Post

அலோபதி,ஹோமியோபதி, எந்த மருத்துவம் சிறந்தது? சிறப்பு கட்டுரை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies