இறப்பு சான்றிதழை பரிசோதித்த பின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை அரசியல் கட்சிகள் தெரிவித்தனர். பல இடங்களில் கணவனுக்கு ஓட்டு இருக்கிறது, மனைவிக்கு வாக்கு இல்லை.
சில இடங்களில் பெற்றோர்களுக்கு வாக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு இல்லை. அவ்வாறு நீக்கப்பட்டு இருந்தால், வாக்காளர் கடிதம் கொடுத்து நீக்கி இருக்க வேண்டும். எந்த வேண்டுகோளும் இல்லாமல், கடந்த பல தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர் பெயரை எப்படி நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இறந்தவர்கள் பெயர்கள் தொடர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட பட்டியலை வைத்து எப்படி வாக்காளர் பட்டியல் தயார் செய்ய முடியும்?
இறப்பு சான்றிதழ் பரிசோதித்து வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் எனவும், கடைசி நேரங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தி இதுதான் பட்டியல் என அறிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.