மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.