கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அக்டோபர் 21, 23 ஆகிய தேதிகளில் மாவட்ட வருவாய் அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், போட்டியின்போது ஜான் பாஸ்கோ பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான கருப்பையா மற்றும் பயிற்சியாளர் தியாகராஜன் ஆகியோர் மாணவி ஒருவரை கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.