நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இத்தகைய மிரட்டல்களால், கடந்த 16 நாட்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் உய்க்கி என்ற இளைஞர்தான் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
டெரரிசம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அவர், ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முதலமைச்சர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தனிப்படை அமைத்து
ஜெகதீஷ் உய்க்கியை போலீசார் தேடி வருகின்றனர்.