பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடிசை வீடுகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மணிலாவின் துறைமுகப் பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீடுகளில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.