திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சி உடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சீலப்பாடி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைத்தால், குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்றும், அதை ஊராட்சியாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர். இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.