மதுரை அருகே பனையூர் கால்வாயில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு படை வீரர்கள் போராடி மீட்டனர்.
புதுராமநாதபுரம் சாலையில் உள்ள பனையூர் பிரதான கால்வாயில், பசுமாடு ஒன்று எதிர்பாராவிதமாக தவறி விழுந்து விட்டது.
தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கால்வாயில் விழுந்த பசு மாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். சாலையில் திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.