கேரள மாநிலம் திருச்சூரில் சாலையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
கண்ணுரில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஜேகே சினிமாஸ் அருகே லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இந்த விபத்தில் காளியப்பன், நாகம்மா, பங்காசி மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த காயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அலெக்ஸ், ஜோஸ் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.