தைப்பொங்கலன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வின் தேதியை மாற்றம் செய்து ஐசிஏஐ அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டய கணக்காளருக்கான தேர்வு ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்தது. அதேபோல் தமிழகத்தில் 28 தேர்வு மையங்களில் பட்டய கணக்காளர் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது அந்த கோரிக்கையை ஏற்று ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வை 16-ம் தேதிக்கு மாற்றி ஐசிஏஐ அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.