சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுத்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்குள் சுற்றுத்திரியும் குரங்குகள், ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்துகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.