மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தொடர் மழையால் 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது.
தரங்கம்பாடி, பொறையார், தில்லையாடி, திருக்களாச்சேரி, திருக்கடையூர் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.