ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, கடந்த மார்ச் 10 -ம் தேதி தேசிய அணிக்கான தேர்வு சோதனையின்போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனால் இவர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து பஜ்ரங் புனியா மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த காலகட்டத்தில் அவர், போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது மல்யுத்த பயிற்சி அளிக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.