அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
Nov 28, 2026, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : சென்னை  பம்மல் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையிலும், மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்திலும் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.

அம்மா உணவகங்களை மேம்படுத்த கடந்த ஜூலை மாதம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 21 கோடி ரூபாயில் அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவோ, உணவின் தரத்தை மேம்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் மையங்களாக செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதியை ஒதுக்கி ஆரோக்கியமான முறையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags: DhinakaranAmma canteensPammal amma canteen
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Next Post

பெண் போலீசார் இல்லாமல் சிறுமியிடம் விசாரணை – அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Related News

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றம் – ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்!

மகளிர் இடஒதுக்கீடு வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் – பிரதமர் மோடி உறுதி!

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை காண குவிந்த பக்தர்கள் – பக்தி பாடல்கள் பாடி உற்சாகம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விழா – கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற உத்தரவு – இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் கூடா நட்பு கேடாய் முடிந்தது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்ற உத்தரவு ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வெற்றி – நிதின் நபின்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies