எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 3ஆவது நாளாக முடங்கின.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கின.
இந்தநிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய நிலையில், பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.