சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 984 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், இரண்டாவது நாளாக பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பாட் புக்கிங் மூலம் 16 ஆயிரத்து 584 பேர் தரிசனம் செய்துள்ளனர். நடப்பு சீசனில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை மொத்தம் 10 லட்சத்து 2 ஆயிரத்து 196 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் மூலம் தேவசம் போர்டுக்கு 15 கோடியே 89 லட்சம் ரூபாய் கூடுதலாகவும், நடை திறக்கப்பட்டு 12 நாளில் 63 கோடியே 11 லட்சம் ரூபாயும் வருவாயாக கிடைத்ததாகவும் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.