முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வெள்ள நீரை அப்புறப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் திருவண்ணாமலையில் 7 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
, முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக குற்றம்சாட்டிய இபிஎஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.