இந்தியாவில் பிரிவினையை தூண்டும், காலிஸ்தான் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக செயல்படும், 10,000-க்கும் மேற்பட்ட URL-களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடங்கியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.
இந்நிலையில் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக நிவாரண பொருட்களை ஆட்சியர் அருணா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.