ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் இந்து சாம்ராட் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சனாதன தர்மத்தை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனது வாழ்நாள் முழுவதும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரது இந்த அர்ப்பணிப்புக்காக, கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண கீதானுகிரஹா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரியாய புட்டிகே மடத்தின் ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சுவாமிஜி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு விருது வழங்கி கௌரவித்தார்.