தெலுங்கு நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை வேண்டுமென்றே தாக்கவில்லை என அவரது மகன் மஞ்சு விஷ்ணு விளக்கமளித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மஞ்சு விஷ்ணுவுக்கும் இடையே சொத்து பிரச்னை நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஹைதராபாத்தில் மோகன் பாபு வீட்டுக்குச் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அவர் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
புகாரின்பேரில், நடிகர் மோகன் பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மோகன் பாபு மகன் மஞ்சு விஷ்ணு, செய்தியாளர்கள் சிலர் வீட்டின் கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே வந்து தனது தந்தையிடம் பேட்டி கேட்டதாகவும், அப்போது கூட அவர் இருகைகள் கூப்பி அவர்களை வரவேற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், செய்தியாளர்களின் மைக் முகத்தில் இடிக்கும்படி வந்ததால்தான் தனது தந்தை அவ்வாறு நடந்து கொண்டதாக கூறிய மஞ்சு விஷ்ணு, தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.