விசிக தலைவர் திருமாவளவனின் கொள்கைகளை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்ததாலேயே அக்கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் கோயிலில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலினின் முன்பு பணிந்து போகும் திருமாவளவனின் கொள்கைகளை ஏற்க மறுத்ததாலேயே ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு திமுக அரசே காரணமெனவும் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.