சபரிமலையில் சுமார் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.
4 முதல் 5 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வரை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு சுக்கு கலந்த மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும், பம்பை மற்றும் எருமேலி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.