விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது வெறும் நாடகம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் 33 இடங்களில் தெருமுனை பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கொடிக்கம்பம் என்ற பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளை விமர்சித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஏபி முருகனாந்தம், சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது வெறும் நாடகம் என்றும் அவர் கூறினார்.