திருச்சியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனை நடத்தினர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செயல்பட்டு வரும் ரோஷன் கன்சல்டன்சி என்ற நிறுவனம் வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, அந்நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், கடந்த 2 மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 31 தமிழக இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவிரும்புவோர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே செல்லவேண்டும் என்றும் தெரிவித்தார்.