காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை என 2014 ஆம் ஆண்டு மக்கள் தெரிவித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே மக்களிடம் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது காங்கிரஸ்.
ஆனால் காங்கிரஸ் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே 2014 தேர்தல் முதல் மக்கள் அனைவரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் திரும்பத் திரும்ப காங்கிரஸூக்கு சொல்லி வருகிறார்கள் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.